கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு தலைவாசல்களும் எளிய வாஸ்து பலன்களும்

Saturday 27 January 2018

தலைப்பு 
கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு தலைவாசல்களும் எளிய வாஸ்து பலன்களும்

தலைப்பு
EAST OR WEST HOME IS THE BEST
கிழக்கு அ வடக்கு வீடு சிறப்பு பலன்கள் தரும்

ஈஸானி மூலை என அழைக்கப்படும் வடகிழக்கு மூலை சிறப்பு  
வடகிழக்கு மூலை சிறப்பு
பொதுவாக கிழக்கு தெற்கு மேற்கு அ வடக்கு என எந்த திசை வீடுகளானாலும் ஈஸானி மூலை என அழைக்கப்படும் வடகிழக்கு மூலை எந்தளவு திறந்த வெளி மற்றும் காற்றோட்டமாக உள்ளதோ அந்தளவு நன்மை உண்டு. காரணம் வாஸ்து ஒரு வித அறிவியல் வடகிழக்கு காற்று ஒரு வித சிறப்பு. விரிவாக நான் அறிந்த அளவில் வாஸ்து பலன்களை பின் பதிவுகளில் வெளியிடுகிறேன்.

தலைவாசல் உச்சம் பலன்கள் 
கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு எந்த திசை ஆகினும் தலைவாசல் உச்சத்தில் அமைதல் அவசியம். காரணம் வடகிழக்கு காற்றும் சூரிய ஒளியின் சிறப்பும் ஒரு காரணம் பின் பதிவுகளில் தெரிந்த வரை வடகிழக்கு வாஸ்து பலன்களை வெளியிடுகிறேன். எந்த திசை ஆயினும் தலைவாசல் உச்சத்தில் அமைத்தல் அவசியம் ஆகும்.

கிழக்கு வடக்கு தலைவாசல் 
பொதுவாக தலைவாசல்கள் உச்சத்தில் அமைத்தல் ஒரு காரணம் உண்டு. அவ்வகையில் கிழக்கு மற்றும் வடக்கு திசை வீடுகளுக்கு வடகிழக்கு மூலை திறந்தவெளி அமைப்பு கிடைத்து விடும். பழங்கால வீடுகளானாலும், இன்றைய நவீன முறை போர்டிகோ அமைப்பு வீடுகளானாலும் அமைப்பு கிடைத்து விடும். இன்றைய சிவில் இஞ்சினியர்ஸ் வாஷ்துவில் கைதேர்ந்தவர்கலாகும்.

தெற்கு மேற்கு தலைவாசல் 
பொதுவாக தலைவாசல்கள் உச்சத்தில் அமைதல் ஒரு காரணம் உண்டு. அவ்வகையில் தெற்கு மற்றும் மேற்கு திசை வீடுகளுக்கு உச்சத்தில் தலைவாசல் அமைக்கப்படுதல் வேண்டும். மேலும் நேரெதிர் திசையில்  (தெற்கு என்றால் வடக்கு மேற்கு என்றால் கிழக்கு) ஒரு வாசல் அ 4 க்கு 3 என்ற அளவில் ஒரு ஜென்னலாவது கண்டிப்பாக வைத்தல் அவசியம்.

வடகிழக்கு காற்றும் தென்மேற்கு காற்றும் 
வடக்கு கிழக்கு காற்று வீட்டினுள் பிரவேசிப்பது சிறப்பு ஆகும். தெற்கு மேற்கு காற்று வந்த வழியே வீட்டில் பிரவேசிக்காமல் வெளியே சென்று விடுதல் நலம் தரும். தெற்கு மேற்கு திசை வீடுகளுக்கு நேர் எதிர் திசையில் கதவு அ ஒரு ஜென்னலாவது அவசியம் வைக்க வேண்டிய காரணமும் அதுவே. மேலும் வடகிழக்கு காற்று மற்றும் சூரியஒளி வீட்டினுள் பிரவேசிக்க வேண்டிய அவசியதிர்காகவுமே தெற்கு மேற்கு திசை தலைவாசல் வீடுகளுக்கு நேர் எதிர் திசையில் கதவு அ ஜென்னல் வலியுருதப்படுகிறது.

ஜோதிடமும் தலைவாசல்களும் 
ஜோதிடத்தில் வாஸ்து பலன்கள் 
ஜோதிடத்தில் வீட்டின் தலைவன் ஜெனன கால ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த ராசியின் திசை தலைவாசல்கள் வீடுகள் பரிந்துரைக்கப்படும்.

ஈஸானி மூலை அக்னிமூலை வாயுமூலை குபேரமூலை 
சமையலறை 
முதல் தரமாக அக்னிமூலையில் சமையலறை அமைத்து கொள்ளுதல் சிறப்பு ஆகும். இரண்டாம் தரமாக வாயுமூலை வேறு வாய்ப்பு இல்லாத பட்சத்தில்.

படுக்கையறை 
முதல் தரமாக குபேரமூலையில் படுக்கையறை அமைத்து கொள்ளுதல் சிறப்பு. இரண்டாம் தரமாக ஈஸானி மூலையில் அமைத்து கொள்ளலாம் பெரியவர்கள் குழந்தைகள் விருந்தினர் பயன்படுத்தலாம். வேறு சில விசயங்களுக்கு மாஸ்டர் பெட்ரூம் ( குபேரமூலை ) பயன்படுத்தலாம்.

கழிவறை மற்றும் செப்டிக் டேன்க்
கழிவறை அடிப்படையில் வாயுமூலையில் பயன்படுத்தலாம்.கழிவறை மாஸ்டர் பெட்ரூமில் கூட பயன்படுத்தலாம் ஆனால் கண்டிப்பாக கழிவு வாயு மூலையில் தேங்க வேண்டும். வேறு எந்த மூலையிலும் செப்டிக் tank அமைத்தல் குடாது.

ராசி லக்னம் திசைகள் 
ராசி எதிர்பார்ப்பு யோகத்தை மட்டுமே குறிக்கும். அம்பானி ஆகும் ஆசை எல்லோருக்குமே உண்டு. ஆனால் அனுபவிக்கும் யோகம் வேண்டும். எதிர்பார்ப்புக்கு யோகம் தேவையில்லை. ஜோதிடத்தில் லக்னமே ஜாதகர் அ ஜாதகியை குறிக்கும், ஜாதகர் அ ஜாதகியின் அனுபவிக்கும் யோகத்தை குறிக்கும். ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் லக்னம் அமைந்த திசை ( தலைவாசல் ) வீடுகளை அமைத்து கொள்ளுதலே மேம்பட்ட பலன்களை தரும். தெற்கு மேற்கு சாலையை பார்த்த நிலங்களாக இருந்தாலும் கிழக்கு வடக்கு திசையில் தலைவாசல்களை அமைத்து கொள்ளும் விதத்தில் இன்று கட்டுமானத்துறை வளர்ச்சி பெற்றுள்ளது பயன்படுத்தி கொள்ளலாம். 2000 3000 ( பிளானிங் ) ஆயிரம் செலவில். 

துளசி மாடம்  நெல்லி மரம் சிறப்பு 
எளிய முறை வாஸ்து பரிகார பலன்கள் 
வடகிழக்கு ஈஸானி மூலையில் துளசி மாடம் அமைத்து கொள்ளுதல் குடுத்தால் நலம் தரும். நெல்லி மரமும் அமைத்து கொள்ளலாம். பொதுவாக ஈஸானி மூலையில் அதிக பாரம் ( வெயிட் ) இருத்தல் குடாது.

ஜென்ம நட்சத்திரங்களும் விருட்சங்களும் 
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஜெனன கால பிறப்பு நட்சத்திரத்திற்கு ஏற்ற விருட்சங்கள் உள்ளன. வீட்டில் அமைத்து நாம் வசிக்கும் வீட்டையும் கோவிலாக மாற்றி நலம் பெறலாம்.

வாஸ்து குறைபாடு பரிகாரம் 
எளிய முறை வாஸ்து பரிகார பலன்கள் 
வாஸ்து குறைபாடு என்றால் வீட்டை சுற்றி காற்று சுழலும் அளவு 3 அடியேனும் ( சுற்றுசுவர் ) விடலாம். காலை மாலை வீடில் மணியோசை, விளக்கு ஏற்றுதல், மீன்தொட்டி அமைத்தல், ஓடும் 7 வெள்ளை குதிரைகள் படம் மாற்றுதல், குபேரன் பொம்மைகள் ஆங்காங்கே மின்சாதன பொருட்கள் மீது, சோகேஷ் மீது என குபேரன் பொம்மைகளை வைத்தல், கழிவறையை அவ்வப்பொழுது சுத்தமாக வைத்தல் போன்ற நிறைய அம்சங்கள் மூலம் நலம் பெறலாம்.

ஷேர் செய்யவும்

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். ஜோதிட சந்தேகங்களுக்கு சூட்சம பதில்கள் கிடைக்கும்.






 
---------------------- Install Valid HTML5 Latest SEO Friendly For Bloggers ----------------- Showing posts from January, 2018 ----------------------------------- Anutrickz